Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய பெருங்கடலில் இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் கூட்டு பயிற்சி

இந்திய பெருங்கடலில் இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் கூட்டு பயிற்சி

By: Karunakaran Thu, 24 Sept 2020 6:11:15 PM

இந்திய பெருங்கடலில் இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகள் கூட்டு பயிற்சி

லடாக் மோதலுக்கு பின் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் விதமாக இந்தியா தனது போர்க்கப்பல்களை அங்கு நிலை நிறுத்தியுள்ளது. இந்தியா தனது நட்பு நாடுகளுடன் இனைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகளின் 2 நாள் கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டு பயிற்சி நேற்று தொடங்கியது.

indo-australian,naval,exercise,indian ocean ,இந்தோ-ஆஸ்திரேலிய, கடற்படை, உடற்பயிற்சி, இந்தியப் பெருங்கடல்

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில், இந்திய போர்கப்பல்களான ஐ.என்.எஸ் சயாத்ரி, கர்முக், ஆஸ்திரேலிய போர் கப்பலான ஹோபர்ட் மற்றும் இரு நாடுகளின் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றுள்ளன. இரு நாட்டு வீரர்களின் செயல்பாட்டுத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

மேலும் இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளின் இருதரப்பு உறவை வலிமைப்படுத்தும் விதமாகவும், ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாகவும் இந்த கூட்டு பயிற்சி நடத்தப்படுகிறது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Tags :
|