Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெலிக்கட சிறைச்சாலை படுகொலை வழக்கில் இருந்து இமதுவகே இந்திக சம்பத் விடுவிப்பு

வெலிக்கட சிறைச்சாலை படுகொலை வழக்கில் இருந்து இமதுவகே இந்திக சம்பத் விடுவிப்பு

By: Nagaraj Wed, 15 July 2020 7:55:38 PM

வெலிக்கட சிறைச்சாலை படுகொலை வழக்கில் இருந்து இமதுவகே இந்திக சம்பத் விடுவிப்பு

விடுவிக்கப்பட்டார்... வெலிக்கட சிறைச்சாலையில் படுகொலை வழக்கில் இருந்து சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவு அதிகாரியான இமதுவகே இந்திக சம்பத்தை விடுவித்து நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கட சிறைச்சாலைக்குள் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் நிலையை கட்டுப்படுத்த 8 கைதிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இமதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

welikada,prison,release,murder,testimony ,
வெலிக்கட, சிறைச்சாலை, விடுவிப்பு, கொலை, சாட்சிய பரிசோதனை

குறித்த படுகொலை வழக்கு இன்று நீதிபதிகள் கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியராச்சி மற்றும் மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிகை விடுத்தார்.

இதன்மூலம், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் குற்றவாளிகளை சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவு அதிகாரியான இமதுவகே இந்திக சம்பத்தை விடுவிக்க நீதிமன்ற அமர்வு ஏகமனதாக முடிவு செய்தது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்ட நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான சாட்சிய பரிசோதனைகளை ஜூலை 30 ஆம் திகதி மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

Tags :
|
|