Advertisement

முழுமையாக ரயில்சேவைகள் தொடங்குவது குறித்து தகவல்

By: Nagaraj Sat, 19 Dec 2020 10:00:35 AM

முழுமையாக ரயில்சேவைகள் தொடங்குவது குறித்து தகவல்

இப்போது தெரிவிக்க முடியாது... 'நாட்டில், முழுமையாக ரயில் சேவைகளை துவக்குவது பற்றி, இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது' என, ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, நாடு முழுதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன்பின், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, ரயில் சேவைகளை, ரயில்வே துவக்கியுள்ளது.

ஆனாலும், ரயில் சேவைகள் இன்னும் முழுமையாக துவக்கப்படவில்லை. இந்நிலையில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது: கொரோனா பரவலால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

trains movement,number,service,fully ,ரயில்கள் இயக்கம், எண்ணிக்கை, சேவை, முழுமையாக

இந்த ஆண்டில் பயணியர் ரயில் சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில், 87 சதவீதம் குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், பயணியர் ரயில் சேவை மூலம், இதுரை, 4,600 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இந்த நிதியாண்டு முடிவதற்குள், இது, 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, நம்புகிறோம். பயணியர் ரயில் சேவைகளில் ஏற்பட்ட வருவாய் இழப்பை, சரக்கு ரயில்கள் மூலம் ஈடுகட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு, இதுவரையிலும், கடந்த ஆண்டு சரக்கு ரயில்கள் மூலம் கிடைத்த வருவாயில், 97 சதவீதம் கிடைத்துள்ளது.

ரயில்வே இப்போது, 1,089 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. கொரோனா அச்சம் நீங்காத நிலையில், இந்த ரயில்களில், 40 சதவீத இருக்கைகளுக்கு மேல் காலியாக உள்ளன. தொற்று பரவல் நிற்காத நிலையில், ரயில் சேவைகளை, முழுமையாக துவக்குவது பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது. நிலைமைக்கு ஏற்ப, ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags :
|