Advertisement

கொரோனா நிவாரண நிதி குறித்து இணையத்தில் தகவல்

By: Nagaraj Thu, 16 July 2020 9:10:16 PM

கொரோனா நிவாரண நிதி குறித்து இணையத்தில் தகவல்

நிவாரண நிதி குறித்து இணையத்தில் வெளியிட வேண்டும்... முதல்வர் நிவாரண நிதியின்கீழ் கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பதை குறித்து இணையதளத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய – மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை என புகார் தெரிவித்திருந்தார். வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

website,details,relief fund,order,court ,இணையதளம், விவரங்கள், நிவாரண நிதி, உத்தரவு, நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதல்வர் நிவாரண நிதியின் கீழ் யார் யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள், அதன் மூலம் யாரெல்லாம் பலனடைந்துள்ளார்கள் என்பது குறித்தான முழு விவரத்தையும் வெளியிடுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா நிவாரணமாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஜூன் வரை ரூ.382.89 கோடி நிதி வந்துள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் இணையதளத்தில் உள்ளது.

ரூ.10 லட்சத்திற்கு குறைவாக நிதி கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிப்பதில் சிரமம் உள்ளது. குறைந்த அளவே அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதால் முழுமையான விவரங்களை வெளியிட தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் தொகுத்து முழு விவரங்களை இணையதளத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Tags :
|