Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள் ஒதுக்கீடு விஷயத்தில் பாஜக உறுதியாக உள்ளது என்று தகவல்

உள் ஒதுக்கீடு விஷயத்தில் பாஜக உறுதியாக உள்ளது என்று தகவல்

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:54:39 PM

உள் ஒதுக்கீடு விஷயத்தில் பாஜக உறுதியாக உள்ளது என்று தகவல்

பாஜக உறுதியாக உள்ளது... உள் ஒதுக்கீடு விஷயத்தில் பாஜக உறுதியாக உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் வரை முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை பற்றிய விவரத்தை அரசு எப்போது வெளியிடும்? என கேட்ட நீதிபதிகள், இதுபற்றி தமிழக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்கும்படி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

internal allocation,bjp.,central government,annamalai,information ,உள் ஒதுக்கீடு, பாஜக., மத்திய அரசு, அண்ணாமலை, தகவல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதியளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, "உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜகவை பொறுத்தவரை இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியாக உள்ளது. மாநில அரசு ஒப்படைத்துள்ள அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு ஒதுக்கீடு இந்த வருடம் கொடுப்பதா அல்லது அடுத்த வருடம் கொடுப்பதா என்ற குழப்பமான நிலைப்பாட்டில் தான் மத்திய அரசு உள்ளது.

ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதே நேரம் அனைத்து விஷயங்களிலும் இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என மத்திய அரசு, உள் ஒதுக்கீடு விவகாரத்தில் கைவைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது" என தெரிவித்தார்.

Tags :
|