Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்... தயார் நிலையில் மீட்புக்குழு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்... தயார் நிலையில் மீட்புக்குழு!

By: Monisha Wed, 18 Nov 2020 10:02:30 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்... தயார் நிலையில் மீட்புக்குழு!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழையின் போது தான் தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்கிறது. தமிழகத்தில் 4,133 பகுதிகள் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்காக 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4,680 இடங்கள் தயார் நிலையில் உள்ளன.

tamil nadu,northeast monsoon,rescue team,relief camp,dams ,தமிழ்நாடு,வடகிழக்கு பருவமழை,மீட்புக்குழு,நிவாரண முகாம்,அணைகள்

பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பேரிடர் காலங்களில் உடனடியாக செயல்பட 43,409 முதல்நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர தொடர்புக்கு மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தற்போது பெய்து வரும் மழையால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பருவமழையை எந்தவித சேதமும் இன்றி எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Tags :