Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம்

By: Monisha Sat, 19 Dec 2020 11:58:39 AM

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம்

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவதற்கும், குடில் அமைப்பதற்கும், வீடுகளை அலங்கரிப்பதற்குமான அலங்கார பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகிறார்கள். இந்த ஸ்டார் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விதவிதமாக விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லையில், பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணார்பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளிலும் ஸ்டார் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இரவு நேரங்களில் ஜொலிப்பதை பார்த்து செல்வதற்கு கூடுதலாக மக்கள் கூட்டம் வந்து செல்கிறது. மேலும், கடைகளில் ஸ்டார் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

christmas,stars,decorative flowers,cottage,toys ,கிறிஸ்துமஸ்,ஸ்டார்கள்,அலங்கார பூக்கள்,குடில்,பொம்மைகள்

இந்த ஆண்டு துணிகளால் செய்யப்பட்ட புதிய வடிவிலான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. இவை அனைத்தும் மழையால் சேதம் அடையாத வகையில், பூச்சிகள் உள்ளே புகாதபடி செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், மணி, பிளாஸ்டிக் மற்றும் காகித அலங்கார பூக்கள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை குடும்பம், குடும்பமாக வந்து பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

இதுதவிர பாளையங்கோட்டையில் பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வைப்பதற்காக விதவிதமான பொம்மைகள் விற்பனை ஆகிறது. ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது வீட்டின் முன்பு கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து அவற்றில் மினுமினுக்கும் கலர் விளக்குகளை தொங்க விட்டுள்ளனர். இதுதவிர மாட்டுத்தொழுவத்தில் கிறிஸ்து பிறந்ததை விளக்கும் பொருட்டு பெரும்பாலான கிறிஸ்தவர்களும் தங்களது கிறிஸ்துமஸ் குடிலில் மாட்டு தொழுவம் அமைத்து உள்ளனர்.

Tags :
|