Advertisement

நாகையில் மீண்டும் கருவாடு தயாரிக்கும் பணி தீவிரம்

By: Monisha Mon, 14 Dec 2020 4:01:14 PM

நாகையில் மீண்டும் கருவாடு தயாரிக்கும் பணி தீவிரம்

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு குடிசைகள் அமைத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, வாளை, கிழங்காமீன், திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகை கருவாடுகள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும்.

fishing port,dry fish,production,trade,production ,மீன்பிடிதுறைமுகம்,கருவாடு,தயாரிப்பு,வர்த்தகம்,உற்பத்தி

இந்நிலையில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக நாகை விசைப்படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கனமழையால் நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் கருவாடு உற்பத்தி அடியோடு முடங்கியது.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் கருவாடு தயாரிக்க தேவையான அனைத்து வகையான மீன்களும் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. இதை வைத்து தற்போது கருவாடு தயாரிப்பு பணியில் மும்முரமாக மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|