Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதித்த எம்எல்ஏ அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை

கொரோனாவால் பாதித்த எம்எல்ஏ அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை

By: Nagaraj Thu, 04 June 2020 8:37:08 PM

கொரோனாவால் பாதித்த எம்எல்ஏ அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதி செய்யபட்டுள்ளதை அடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

intensive care,hospital,report,liver problem,dmk mla ,தீவிர சிகிச்சை, மருத்துவமனை, அறிக்கை, கல்லீரல் பிரச்னை, திமுக எம்எல்ஏ

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், 80% வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

மேலும் எம்எல்ஏ அன்பழகனுக்கு கல்லீரல் பிரச்சனையும் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால் திமுக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags :
|