Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

By: Karunakaran Sun, 01 Nov 2020 08:08:35 AM

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

சீனாவின் டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு நவம்பர் 12-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டது.

தற்போது, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து, டிக் டாக் பயனாளர்கள் 3 பேர் பென்சில்வேனியா மாகாணம் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி வெண்டி பீட்டில்ஸ்டோன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

interim injunction,trump,ban,tik-tok ,இடைக்கால தடை உத்தரவு, டிரம்ப், தடை, டிக்-டோக்

வெண்டி பீட்டில்ஸ்டோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவு மக்களின் பேச்சுரிமைக்கு இடையூறாக இருப்பதாக வாதிட்டனர். அதன்பின், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

லடாக் மோதலுக்கு பின் சீனாவின் செயலிகள் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலுக்கு தடை விதிக்க பல்வேறு கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|