Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 மாவட்டங்களில் இடைவிடாத மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

12 மாவட்டங்களில் இடைவிடாத மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By: Nagaraj Mon, 17 Aug 2020 12:15:49 PM

12 மாவட்டங்களில் இடைவிடாத மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாத மழை.... தெலுங்கானாவின் 12 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகள் யாவும் ஆறுகள் போல வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருகி அபாய கட்டததைத் தாண்டி விட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

heavy rains,floods,rescue,telangana,vehicles ,பலத்த மழை, வெள்ளம், மீட்புப்பணி, தெலுங்கானா, வாகனங்கள்

வாரங்கல், கரீம் நகர் பகுதிகளில் ஏரிகள் அபாயகரமான நிலையில் கரை உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளன. சித்திப்பேட் என்னுமிடத்தில் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டன.

ஹைதராபாத் நகரிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளப்பகுதிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்ட்ரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழையால் ஆந்திரவின் வடமாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

Tags :
|
|