Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிபந்தனைகள் அடிப்படையில் சர்வதேச விமான போக்குவரத்து; மத்திய அமைச்சர் தகவல்

நிபந்தனைகள் அடிப்படையில் சர்வதேச விமான போக்குவரத்து; மத்திய அமைச்சர் தகவல்

By: Nagaraj Thu, 16 July 2020 9:09:40 PM

நிபந்தனைகள் அடிப்படையில் சர்வதேச விமான போக்குவரத்து; மத்திய அமைச்சர் தகவல்

சர்வதேச விமான போக்குவரத்து... இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவிய காரணத்தால் மார்ச் 22 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், “ பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விமானங்களை இயக்க இருக்கிறது. ஏர் பிரான்ஸ் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பாரிஸ் இடையே 28 விமானங்களை இயக்கவுள்ளது.

minister of international affairs,aviation,launch,union ,சர்வதேசம், விமானச் சேவை, தொடக்கம், மத்திய அமைச்சர்

அதே நேரத்தில் அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 18 விமானங்களை இயக்கவுள்ளது. டெல்லி மற்றும் நியூயார்க் இடையே தினசரி விமானமும், டெல்லி மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று முறை விமானமும் பறக்க இருக்கின்றன" என்று பூரி கூறினார்.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஜூலை 3 ஆம் தேதி சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன் பின்னர் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்தது. மூத்த அரசாங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் தடை இப்போது நிறுத்தப்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்குள், உள்நாட்டு விமானங்களில் குறைந்தது 55-60 சதவீதம் இயக்கப்படும் என்றும் பூரி கூறினார்.

இதன் மூலம் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags :
|