Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பதவியேற்க சிறையில் உள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு

பதவியேற்க சிறையில் உள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு

By: Nagaraj Tue, 11 Aug 2020 4:46:07 PM

பதவியேற்க சிறையில் உள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு

அமைச்சர் பதவியேற்க அழைப்பு... விடுதலை புலிகளின் முன்னாள் போராளியும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), கண்டியில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, அமைச்சர் பதவியை ஏற்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் அவருக்கு எந்த பதவி வழங்கப்படும் என்பது தொடர்பாக இன்னும் தெரியவில்லை என்றும் அது அமைச்சரவை அல்லது அமைச்சரவை அல்லாத பதவியாக இருக்குமா என்றும் பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில், பிள்ளையான் 54,198 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். இவ்வாறு சிறையில் இருந்தபடியே பாரிய வெற்றியை தனதாக்கியுள்ள பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

interpretation,batticaloa,minister,inauguration,invitation ,விளக்கமறியல், மட்டக்களப்பு, அமைச்சர், பதவியேற்பு, அழைப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டால் இலங்கை பொதுஜன பெரமுனவால், பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் கூறியுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் தற்போது விளக்கமறியலில் உள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :