Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களின் வரிப்பணத்தில் முழு பக்க விளம்பரம் ஒரு கேடா? மு.க. ஸ்டாலின் ட்வீட்

மக்களின் வரிப்பணத்தில் முழு பக்க விளம்பரம் ஒரு கேடா? மு.க. ஸ்டாலின் ட்வீட்

By: Monisha Tue, 29 Dec 2020 4:56:58 PM

மக்களின் வரிப்பணத்தில் முழு பக்க விளம்பரம் ஒரு கேடா? மு.க. ஸ்டாலின் ட்வீட்

2021 மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக, அ.தி.மு.க. - தி.மு.க. இடையே தினமும் கருத்துமோதல் ஏற்பட்டு வருகிறது. இரு கட்சிகளும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றன.

dmk,aiadmk,election,controversy,tweet ,திமுக,அதிமுக,தேர்தல்,கருத்துமோதல்,ட்வீட்

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முக மூடியை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கழற்றி வீசியிருக்கிறது.

அறிவிக்கப்பட்டவற்றில் முதலீடாகப் பெற்றது வெறும் 9.4% வெத்து வேட்டுகளின் சாயம் வெளுக்கிறது! மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?" என பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|