Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவிலுக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்... முக்கிய முடிவை அறிவிக்கிறாரா?

கோவிலுக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்... முக்கிய முடிவை அறிவிக்கிறாரா?

By: Monisha Fri, 02 Oct 2020 10:04:51 AM

கோவிலுக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்... முக்கிய முடிவை அறிவிக்கிறாரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அ.தி. மு.க.வில் இப்போதே முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. இதனையடுத்து வரும் 7-ந்தேதி அ.தி.மு.க. வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதைஅறிவிக்க இருப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

o. panneerselvam,temple,sami darshan,main decision,admk ,ஓ.பன்னீர்செல்வம்,கோவில்,சாமி தரிசனம்,முக்கிய முடிவு,அதிமுக


இந்த நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வரும் வழியில் பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார்.

பொதுவாக, எந்த முக்கிய முடிவையும் எடுத்து அறிவிப்பதற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம், முருகன் கோவிலுக்கும், அம்மன் கோவிலுக்கும் செல்வது வழக்கம் என்று அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பார்த்தால், இன்றோ, நாளையோ ஓ.பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்கள் மத்தியில் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.

Tags :
|