Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு

By: Karunakaran Thu, 29 Oct 2020 2:26:46 PM

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு

இந்தியாவில் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

mergency law,penalty,air mass,delhi ,அவசர சட்டம், அபராதம், காற்று நிறை, டெல்லி


காற்று மாசை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட வாரியத்தில் அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசடைந்து டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புகை மண்டலம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்று தரக் குறியீடு அபாய அளவை தாண்டியே இருந்தது. ஆனந்த் விகார் பகுதியில் 401 புள்ளிகளாகவும், அலிப்பூரில் 405 புள்ளிகளாகவும், வசீர்பூரில் 410 புள்ளிகளாகவும் இருந்தது.


Tags :