Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.டி. நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி

ஐ.டி. நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி

By: Nagaraj Fri, 19 June 2020 1:39:29 PM

ஐ.டி. நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊழியர்களின் பட்டியலை அளித்து இ-பாஸ் பெற்று இயங்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுவெளியிட்ட அரசாணை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்றுமுதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், சில நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, ரயில் மற்றும் விமான நிலையங்களில் இருந்து பயணிகளை அழைத்துவர மட்டும் பிரிபெய்டு ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களை அனுமதிக்கலாம்.

low staff,it companies,operate,permit,madras ,
குறைந்த ஊழியர்கள், ஐ.டி நிறுவனங்கள், இயங்க, அனுமதி, சென்னை

அப்போதைய அனுமதிக்கு பயணிகள் வைத்துள்ள தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் வழங்கப்பட்ட இ-பாஸ் போதுமானதாகும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்பட அனுமதியுண்டு.
மேலும், இன்று முதல் 30-ம்தேதி வரை குறைந்த ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை வங்கிக் கிளைகள் இயங்கலாம்.
அந்த வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை இல்லை. ஆனால், சமையல் எரிவாயு, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அத்தியாவசிய பொருட்களின் மொத்த வியாபாரிகளுக்காக மட்டுமே வங்கிக் கிளைகள் இயங்கும்.

low staff,it companies,operate,permit,madras ,
குறைந்த ஊழியர்கள், ஐ.டி நிறுவனங்கள், இயங்க, அனுமதி, சென்னை

தொழிற்சாலைகளில் மேலாண்மை மற்றும் கண்காணிப்புபிரிவு அலுவலர்கள் தங்கள் போக்குவரத்துக்காக தொழில்துறை மூலம் இ-பாஸ் பெறலாம். அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கையாள துறைமுகங்களில் குறைந்த ஊழியர்களை பயன்படுத்த அனுமதியுண்டு.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனங்கள் ஊழியர்களின் பட்டியலை அளித்தால் இ-பாஸ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|