Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் பங்கேற்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக தகவல்

புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் பங்கேற்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக தகவல்

By: Nagaraj Wed, 12 Aug 2020 12:44:44 PM

புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் பங்கேற்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக தகவல்

பிள்ளையான் கலந்து கொள்வார்... புதிய நாடாளுமன்ற அமர்வில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வார் எனவும் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கட்சி செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடைபெற்று முடிந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இருந்த மக்கள் 2015 நல்லாட்சி தொடக்கம் மிக தோனையான பாதிப்பை ஏற்பட்டு அபிவிருத்தியிலும் தனித்துவத்திலும் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளனர்.

procedure,parliament,pillaiyan,participates,permission ,நடைமுறை, நாடாளுமன்றம், பிள்ளையான், பங்கேற்பார், அனுமதி

ஆகவே இந்த முறை மக்கள் வழங்கியிருக்கும் செய்தியானது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதாகும். அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சிரமேற்று சி. சந்திரகாந்தன் தலைமையில் முன்னெடுத்துச் செல்லும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கி 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளனர்.

எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி கொள்கை சாந்தவர்களாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்காகவே தவிர தாங்கள் சார்ந்த கட்சிக்காகவே அரசியல் இருப்புக்காகவே அல்ல என்பதனை வெளிப்படையக புரிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் ஒரே கூரையின் கீழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது.

தடுப்பு காவலில் இருக்கின்ற படியினால் நாடாளுமன்ற என்ற சிறப்புரிமையின் கீழ் எதிர்வரும் 20 ம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற அமர்வுக்கு அவர் செல்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது அந்த நாடாளுமன்றம் சென்ற பிற்பாடே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :