Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளை இந்த மாதத்தில் திறக்க சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை இந்த மாதத்தில் திறக்க சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

By: Monisha Fri, 11 Dec 2020 08:26:35 AM

பள்ளிகளை இந்த மாதத்தில் திறக்க சாத்தியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை இந்த மாதத்தில் திறக்க சாத்தியமில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விரும்பிய உயர்கல்வியை பெறுவதற்கு, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம். எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நவம்பர் 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

minister senkottayan,schools,online,students,colleges ,அமைச்சர் செங்கோட்டையன்,பள்ளிகள்,ஆன்லைன்,மாணவர்கள்,கல்லூரிகள்

இந்நிலையில், கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அதேவேளையில் மாணவ - மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

கடந்த வாரம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது குறித்த கேள்விக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தபோது கூறியதாவது:- "பள்ளிகளை இந்த மாதத்தில் திறக்க சாத்தியமில்லை. பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் பேசி முடிவு எடுப்போம்" என்றார்.

Tags :
|