Advertisement

மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1500-க்கு விற்பனை

By: Monisha Fri, 13 Nov 2020 3:48:07 PM

மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1500-க்கு விற்பனை

மதுரையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பூக்கள் விலையின்றி காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆயுத பூஜை தினத்தில் மதுரை மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை ஓரளவுக்கு உயர்ந்தது. பொதுமக்களும் அதிக அளவில் பூக்களை வாங்கினர். சுமார் 9 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் பூக்கள் வரத்தும் குறைவாக இருப்பதால் இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் மார்க்கெட்டில் பூக்கள் விலை வழக்கத்தை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது.

madurai,jasmine,sale,price,market ,மதுரை,மல்லிகை,விற்பனை,விலை,மார்க்கெட்

கடந்த சில நாட்களாக கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை இன்று ரூ. 1500-க்கு விற்கப்பட்டது. அதுபோல முல்லை பூக்கள் ரூ. 1200-க்கும், கனகாம்பரம் ரூ. 1500-க்கும் விற்கப்பட்டன. சம்பங்கி ரூ. 250, செவ்வந்தி ரூ. 250, பட்டர் ரோஸ் ரூ. 150, கேந்தி ரூ. 100-க்கும் விற்கப்பட்டன.

பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் தீபாவளி பண்டிகை நேரத்தில் மேலும் பூக்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|