Advertisement

திருப்பூரில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்வு

By: Monisha Sat, 17 Oct 2020 12:36:09 PM

திருப்பூரில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்வு

ஆயுதபூஜை நெருங்கி வரும் நிலையில், திருப்பூரில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விசேஷ நாட்களில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், "திருப்பூர் மார்க்கெட்டிற்கு ஈரோடு, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது மல்லிகைப்பூவின் வரத்து குறைந்துள்ளது.

tiruppur,ayudha pooja,jasmine,price,merchants ,திருப்பூர்,ஆயுதபூஜை,மல்லிகைப்பூ,விலை,வியாபாரிகள்

இதனால் இதன் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் வரத்து குறைவு மற்றும் முகூர்த்த தினங்கள், ஆயுதபூஜை நெருங்கி வரும் காரணங்களினால் மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருகிற நாட்களில் இவற்றின் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags :
|