Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவேடா மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் வெற்றிக்கு மிகவும் அருகில் வந்துள்ள ஜோ பைடன்

நவேடா மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் வெற்றிக்கு மிகவும் அருகில் வந்துள்ள ஜோ பைடன்

By: Karunakaran Sat, 07 Nov 2020 07:43:03 AM

நவேடா மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் வெற்றிக்கு மிகவும் அருகில் வந்துள்ள ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்து முடிந்தது. தற்போது அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

ஜோ பைடனுக்கு 50.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், டிரம்பிற்கு 47.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய 4 மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன.

joe biden,nevada,pennsylvania,presidential election ,ஜோ பிடன், நெவாடா, பென்சில்வேனியா, ஜனாதிபதித் தேர்தல்

ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜார்ஜியா மாநில அரசு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நவேடா மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் முன்னிலையில் இருந்து வருவதன் மூலம் ஜோ பைடன் வெற்றிக்கு மிகவும் அருகில் வந்துள்ளார்.

சர்வ தேச அளவில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் ஜோ பைடன் அதிபர் ஆவதாக கூறுகின்றன. இருப்பினும் அதிபர் டிரம்ப் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|