Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜோ பைடன் வெற்றி

By: Karunakaran Sun, 08 Nov 2020 09:31:19 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார். தற்போது, வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.

joe biden,us,presidential election,majority ,ஜோ பிடன், அமெரிக்கா, ஜனாதிபதித் தேர்தல், பெரும்பான்மை

அதிபராவதற்கு பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். இதனால், அமெரிக்க அதிபராக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.

தற்போதைய அதிபர் டிரம்பிற்கு 214 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வெற்றியை ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க அதிபராக பைடன் வெற்றி பெற்றதற்கு, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|