Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகா

கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகா

By: Nagaraj Tue, 22 Sept 2020 12:56:57 PM

கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகா

வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகா... கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து அணைகள் திறப்பால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

முக்கிய ஆறுகளான காவேரி, ஹேமாவதி, கபிலா, ஹாரங்கி போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

karnataka,heavy rains,dams,overflows,floods ,கர்நாடகா, கனமழை, அணைகள், நிரம்புகின்றன, வெள்ளம்

வடக்கு கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் உள்ள பத்ரா, துங்கபத்ரால காடாபிரபா, மலபிரபா அல்மாட்டி அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. உடுப்பி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தேசிய பேரிடர் குழு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.

உடுப்பி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இங்கு ஸ்வர்ணா, சீதாநதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 31 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

Tags :
|