Advertisement

கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் செயல்பட துவங்கியது!

By: Monisha Mon, 28 Sept 2020 09:58:15 AM

கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் செயல்பட துவங்கியது!

கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமழிசை துணைக்கோள் நகரத்தில் காய்கறி மார்க்கெட்டும், மாதவரம் பஸ் நிலையத்தில் பழ மார்க்கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டு வந்தது. ஆனாலும் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்கவேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அரசு உத்தரவிட்டதின் பேரில் கடந்த 18-ந் தேதி முதல் கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடி மட்டும் செயல்பட்டு வருகிறது. 28-ந் தேதி முதல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வியாபாரிகளும் தங்கள் கடைகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

corona virus,koyambedu market,traders,sales,vegetable ,கொரோனா வைரஸ்,கோயம்பேடு மார்க்கெட்,வியாபாரிகள்,விற்பனை,காய்கறி

இதனால் கோயம்பேடு மார்க்கெட் புதுப்பொலிவு பெற்றது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நேற்று இரவு 8 மணி அளவில் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) தலைமைச் திட்ட அதிகாரி பெரியசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி மார்க்கெட்டை திறந்து வைத்தனர்.

காய்கறி ஏற்றி வந்திருந்த வாகனங்கள் பச்சைக்கொடி காட்டப்பட்டு மார்க்கெட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. முன்னதாக காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த சரக்கு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஒரு கடைக்கு இரண்டு வாகனங்கள் என்ற வீதத்தில் மட்டுமே மார்க்கெட் வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. 12 நுழைவுவாயில்கள் கொண்ட கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது 4 நுழைவு வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. நள்ளிரவு முதல் காய்கறி விற்பனை நடந்தது.

தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும், நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறி வாங்கி செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Tags :
|