Advertisement

தொடரும் மழை... நிரம்பும் தருவாயில் குமரி மாவட்ட அணைகள்!

By: Monisha Fri, 16 Oct 2020 10:53:11 AM

தொடரும் மழை... நிரம்பும் தருவாயில் குமரி மாவட்ட அணைகள்!

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.80 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 1¾ அடி உயர்ந்து 42.60 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாளில் இந்த அணையில் 3½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 71.70 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 73.80 அடியானது. இந்த அணையில் 2 நாளில் 4½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.84 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.94 அடியாகவும் உயர்ந்துள்ளன.

பொய்கை அணைக்கு நீர்வரத்து இருப்பதால் நேற்று முன்தினம் 10.30 அடியாக இருந்த இந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நேற்று 12.20 அடியாக உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 22.7 அடியாக உயர்ந்துள்ளது.

heavy rains,dams,floods,bay of bengal,storms ,கனமழை,அணைகள்,வெள்ளம்,வங்கக்கடல்,புயல்

அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதாலும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் நேற்று முன்தினமும் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் இந்த அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்ததால் நேற்று பிற்பகலில் இந்த அணையின் மறுகால் மதகு வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை தொட்டதும் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை இந்த அணையில் இருந்து தண்ணீர் பாய்ந்தோடும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் குமரி மாவட்ட அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

Tags :
|
|