Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கும்பகோணம் காவிரி ஆற்றுக்கரையில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை விதிப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்

கும்பகோணம் காவிரி ஆற்றுக்கரையில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை விதிப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்

By: Nagaraj Sun, 19 July 2020 6:57:29 PM

கும்பகோணம் காவிரி ஆற்றுக்கரையில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை விதிப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்

கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் நாளை நடைபெறவிருந்த ஆடி அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்ஜய் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கும்பகோணத்தில் பெருகி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைப் பற்றி பல்வேறு துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக கரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. குறிப்பாக, தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறி கொண்டு வந்தவர்களால்தான் நோய் தொற்று அதிகமாகி உள்ளது.

district collector,kavirikarai,prohibition,audi amavasai ,மாவட்ட ஆட்சியர், காவிரிக்கரை, தடை விதிப்பு, ஆடி அமாவாசை

தொற்று பரவாமல் இருக்க பரிசோதனைகள் முகாம் நடத்த உள்ளோம். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்களுக்காக கும்பகோணத்திலேயே மேலும் சில மையங்களை அமைக்க உள்ளோம். நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு கும்பகோணத்திலேயே சிகிச்சை அளிக்க சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. ஒரு வேளை தஞ்சாவூர் மாட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறினால் அரசின் அனுமதியயை பெற்று முழு ஊரடங்கு மேற்கொள்ளப்படும்.

கும்பகோணத்தில் கூட்ட நெரிசலை குறைக்க காய்கறி விற்பதற்காக 6 இடங்களும், மீன் விற்பதற்காக இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு மட்டும்தான் வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும். இந்த விற்பனையை முறைப்படுத்த 8 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை (ஜூலை 20) ஆடி அமாவாசை ஆகும். இதற்காக பலர் வழக்கமான சடங்குகளை செய்ய கும்பகோணம் காவிரி ஆற்றுக்கு வருவார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் அந்த நிகழ்ச்சி நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோயை கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் கண்காணிப்பு குழுவின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் வியாபாரிகள் மதியம் 4 மணிக்குப் பிறகு கடைகளை நடத்துவதில்லை என்று அவர்களாகவே முடிவுடுத்துள்ளார்கள். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :