Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசோக் கோலட் அரசுக்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் - ரந்தீப் சுர்ஜ்வாலா அறிவிப்பு

அசோக் கோலட் அரசுக்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் - ரந்தீப் சுர்ஜ்வாலா அறிவிப்பு

By: Karunakaran Tue, 14 July 2020 09:10:56 AM

அசோக் கோலட் அரசுக்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் - ரந்தீப் சுர்ஜ்வாலா அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி நடைபெறுகிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளார்.

அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் சச்சின் பைலட் அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள மொத்த 200 சட்டமன்ற இடங்களில் 107 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 13 சுயேட்சைகளும், ராஷ்டிரிய லோக் தல்லை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் அசோக் கோலட் ஆட்சியில் உள்ளது.

randeep surjwala,ashok golat,109 mla,congress ,ரந்தீப் சுர்ஜ்வாலா, அசோக் கோலட், 109 எம்.எல்.ஏ., காங்கிரஸ்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜ்வாலா அளித்த பேட்டியில், பெரும்பான்மையான 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் ராஜஸ்தானில் அசோக் கோலட்டின் ஆட்சி உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாஜகவின் முயற்சியை தோற்கடித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அரசியில் விவகாரங்கள் குறித்து நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றுமொரு கூட்டம் நடைபெற உள்ளது.யாருக்கேனும் யார் மீதாவது ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை அவர்கள் திறந்த மனதுடன் தெரிவிக்க வேண்டும். அனைவரது பிரச்சனைகளையும் கேட்கவும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தயாராக உள்ளதாக ரந்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார்.

Tags :