Advertisement

குமரி மாவட்டத்தில் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: Monisha Thu, 17 Dec 2020 2:03:11 PM

குமரி மாவட்டத்தில் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளை(கிறிஸ்துமஸ் ஈவ்) முன்னிட்டு 24-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.

collector,newsletter,christmas,eve,holidays ,கலெக்டர்,செய்திக்குறிப்பு,கிறிஸ்துமஸ்,ஈவ்,விடுமுறை,

அன்றைய தின விடுமுறைக்கு ஈடாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-வது சனிக்கிழமை(13-2-2021) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

அதே சமயம் அன்றைய தினம் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டுதேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|