Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காதலை சொன்னார்... வீடு பற்றி எரிந்தது; இங்கிலாந்தில் நடந்த சம்பவம்

காதலை சொன்னார்... வீடு பற்றி எரிந்தது; இங்கிலாந்தில் நடந்த சம்பவம்

By: Nagaraj Fri, 07 Aug 2020 11:13:56 AM

காதலை சொன்னார்... வீடு பற்றி எரிந்தது; இங்கிலாந்தில் நடந்த சம்பவம்

என்னப்பா நீங்க இப்படி பண்ணீட்டீங்க... இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி, விளக்குகள் சூழ, பெண் தோழியிடம் காதலை சொன்னார். வீடு பற்றி எறிந்தது. ஆமாங்க. மெழுவர்த்திகள் சரிந்து விழ வீடு தீப்பிடித்து எரிந்து நாசமானது.

சவுத் யார்க்ஷயர் என்ற இடத்தில் தனது பெண் தோழியிடம் காதலை சொல்வதற்காக புதுமையான சூழலை உருவாக்க நினைத்துள்ளார் பிரிட்டிஷ்காரர் ஒருவர். அதற்காக வீடு முழுவதும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை ஏற்றி செமத்தியாக அசத்த நினைத்துள்ளார். ஆனால் அது அதிர்ச்சியாக மாறும் என்று தெரியாமல்.

love,candles,house damage,cops,awareness ,காதல், மெழுகுவர்த்தி, வீடு சேதம், போலீசார், விழிப்புணர்வு

காதலை சொல்லும் போது எதிர்பாராத விதமாக மெழுகுவர்த்தி கீழே விழுந்ததன் மூலம் வீடு தீப்பற்றியதாம். தகவலறிந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்திற்கு இடையில் தீயை அணைத்துள்ளனர். இருந்தாலும் வீடு சேதமடைந்தது.

தொடர்ந்து சேதமடைந்த வீட்டின் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். காதல் நெருப்பு பத்திக்கிச்சு என்கின்றனர் மக்கள்.

Tags :
|
|