Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டி

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டி

By: Karunakaran Fri, 05 June 2020 7:38:27 PM

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டி

கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ராஜீவ் கவுடா, பி.கே. ஹரிபிரசாத் மற்றும் பிரபாகர் கோர், டி. குபேந்த்ரா ரெட்டி ஆகியோரது பதவிக்காலம் வரும் 25-ந்தேதி முடிவடையவுள்ளது. இதற்கான தேர்தல் வரும் வருகிற 19-ந்தேதி நடைபெறும். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 9-ந்தேதி நடைபெறவுள்ளது.

தற்போது இந்த தேர்தலின் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் 68 எம்.எல்.ஏ.-க்கள் இருப்பதால், காங்கிரஸ் நான்கு இடங்களில் ஒன்றை எளிதாக வென்றுவிடும். இதனால் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்று விடுவார்.

congress,mallikarjun karghe,karnataka,rajya sabha ,காங்கிரஸ்,மல்லிகார்ஜுன் கார்கே ,கர்நாடகா,மாநிலங்களவை,

77 வயது மல்லிகார்ஜுன் கார்கே, பாராளுமன்ற தேர்தலில் 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியடைந்தார்.

மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரெயில்வே மந்திரியாக இருந்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் அவர், 9 முறை எம்.எல்.ஏ.-வாகவும், இரண்டு முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

Tags :