Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவீரர் நாள் நினைவேந்தல் அனுசரிக்க மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு

மாவீரர் நாள் நினைவேந்தல் அனுசரிக்க மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு

By: Nagaraj Thu, 19 Nov 2020 9:35:51 PM

மாவீரர் நாள் நினைவேந்தல் அனுசரிக்க மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு

நினைவேந்தல் அனுசரிக்க தடை... மன்னார் மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர் வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து குறித்த கட்டளையை பெற்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் கருத்து தெரிவிக்கையில் , மன்னார் பொலிஸார் இன்று ( வியாழக்கிழமை) காலை மன்னார் நீதிமன்றத்தில் எதிர் வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தக்கூடாது.

remembrance,prohibition,order,sri lanka,punishment ,நினைவேந்தல், தடை,  உத்தரவு, இலங்கை, தண்டனை

மன்னார் நீதிமன்ற நியாயதிக்க எல்லைக்குள் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை தடுக்கும் வகையில், மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சுரேந்திரன் ரவல்,அன்ரன் றொஜன் ஸ்ராலின்,வி.எஸ்.சிவகரன் மற்றும் அலக்ஸ் றொக்ஸ் ஆகிய 5 பேருக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் எதிர் வருகின்ற 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த கூடாது எனவும், மாவீரர் தினத்தில் பொது மக்களை ஈடுபடுத்துவதை தடுக்கும் வகையிலும் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள்,மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் சட்டத்திற்கு அமைவாக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.என சட்டத்தரணி எஸ்.டிணேசன் மேலும் தெரிவித்தார்.

Tags :
|