Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "மாஸ்க் பரோட்டா"; ஓட்டல் நிர்வாகம் நூதனம்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "மாஸ்க் பரோட்டா"; ஓட்டல் நிர்வாகம் நூதனம்

By: Nagaraj Thu, 09 July 2020 7:09:51 PM

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "மாஸ்க் பரோட்டா"; ஓட்டல் நிர்வாகம் நூதனம்

மாஸ்க் வடிவ பரோட்டா, கொரானா வடிவ ரவா தோசை, போண்டா என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மதுரையில் இயங்கி வரும் ஓட்டல் ஒன்று.

கொரோனா தொற்றுத் நோய் பரவ ஆரம்பித்தது முதல் மாஸ்க் அணிவதன் கட்டாயத்தை அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், அதனை மக்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் கள நிலவரம்.

அண்மையில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மதுரை வந்திருந்தபோது, ‘மதுரை மக்கள் ரோட்டில் செல்லும்போது பெரும்பாலும் மாஸ்க் அணிவதில்லை’ என்றார். நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் மதுரையில், மக்களிடையே மாஸ்க் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்த, டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாகம், ’மாஸ்க் பரோட்டா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க் பரோட்டா, மதுரை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

mask barotta,hotel,reception,madurai,children ,மாஸ்க் பரோட்டா, ஓட்டல், வரவேற்பு, மதுரை, குழந்தைகள்

இதுகுறித்து மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவரும், டெம்பிள் சிட்டி ஹோட்டல் நிர்வாக இயக்குநருமான குமார் கூறுகையில், கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நேர்த்தில், மக்களிடையே கொரோனா குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த, ’கொரோனா போண்டா’, ’கொரோனா ரவா தோசை’ அறிமுகம் செய்தோம்.

இந்நிலையில், மதுரை மக்கள் பலரும் மாஸ்க் அணியாமல்தான் வெளியே வருகிறார்கள். அதனால், மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தோம். பரோட்டாவுக்கு உலக அளவில் ஃபேமஸ் நம்ம மதுரைதான். ஏன் மாஸ்க் வடிவ பரோட்டா செய்யக் கூடாது எனத் தோன்றியது.

சாதாரண பரோட்டா செய்வதற்கான அதே மூலப்பொருள்களைக் கொண்டு மாஸ்க் வடிவில் செய்தோம். நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஒரு செட் மாஸ்க் பரோட்டா விலை 50 ரூபாய்” என்றார் புன்னகையோடு.

Tags :
|