Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவமனைகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கிய கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி

மருத்துவமனைகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கிய கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி

By: Nagaraj Wed, 13 May 2020 1:13:10 PM

மருத்துவமனைகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கிய கால்பந்தாட்ட வீரர் மெஸ்சி

நிதியுதவி வழங்கிய மெஸ்சி... பார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெஸ்சி ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பண உதவி செய்துள்ளார்.

messi,salary,barcelona team,sponsor,hospital ,மெஸ்சி, சம்பளம், பார்சிலோனா அணி, நிதியுதவி, மருத்துவமனை

தென்அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கும் வகையில் மெஸ்சி 4 கோடி ரூபாய் (5.4 லட்சம் டாலர்) நிதியுதவி வழங்கியுள்ளார்.

பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70 சதவீதத்தை விட்டுக்கொடுக்க தயார் என்று கூறிய மெஸ்சி, கிளப்பின் ஸ்டாஃப்கள் 100 சதவீதம் சம்பள பெறுவதற்கு உறுதி அளிப்போம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|