Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிவு

நீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிவு

By: Monisha Sat, 19 Sept 2020 1:10:28 PM

நீர் திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பைக் காட்டிலும், வரத்து குறைவாக இருப்பதால், அணை நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மழை குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தில் ஏற்றத்தாழ்வு நீடித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 12 ஆயிரத்து 079 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வரும் வருகிறது.

cauvery,rain,mettur dam,delta irrigation,canal ,காவிரி,மழை,மேட்டூர் அணை,டெல்டா பாசனம்,கால்வாய்

இன்று காலை முதல் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 12,079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் திறப்பைக் காட்டிலும், வரத்து குறைவாக இருப்பதால், அணை நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 91.35 அடியாக இருந்தது. இன்று காலை 90.84 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 53.6 டிஎம்சியாக உள்ளது.

Tags :
|