Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூன்றாவது முறையாக 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மூன்றாவது முறையாக 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

By: Nagaraj Sun, 25 Oct 2020 12:54:44 PM

மூன்றாவது முறையாக 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மூன்றாவது முறையாக 100 அடியாக உயர்ந்தது... நிகழாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 100.08 அடியாக உயர்ந்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,694 கன அடியிலிருந்து 20,298 கன அடியாக அதிகரித்துள்ளது.

fort,mettur,water,water level,100 feet,3rd time ,கல்லணை, மேட்டூர், தண்ணீர், நீர்மட்டம், 100 அடி, 3வது முறை

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக நொடிக்கு 800 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது; அணையின் நீா் இருப்பு 64.94 டி.எம்.சி.யாக உள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 510 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,010 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

Tags :
|
|
|