Advertisement

காணாமல் போன இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டார்

By: Nagaraj Thu, 27 Aug 2020 8:00:34 PM

காணாமல் போன இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டார்

இளம் பெண் மீட்பு... கனடாவில் காணாமல் போன 18 வயது இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரொரன்ரோ பொலிசார் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி அலனா ஜாய்னர் என்ற 18 வயது பெண் கடந்த 24ஆம் திகதி
பிராட்வியூ பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

alana,civilians,police,thank you,rescue ,அலனா, பொதுமக்கள், பொலிஸார், நன்றி, மீட்பு

5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட அலனா-வின் வலது கையில் with struggle comes என்ற வார்த்தை டாட்டூவாக குத்தப்பட்டிருக்கும் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

அலனாவை பொலிசார் தேடி வந்த நிலையில் அவரை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு 2.25 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலனாவை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு பொலிசார் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|