Advertisement

சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:09:32 AM

சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை

இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெப்பம் தணிந்துள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருகிறது.

chennai,rain,early morning,airport,t.nagar ,சென்னை, மழை, அதிகாலை, விமான நிலையம், தி.நகர்

இந்நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை, கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் வண்டலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது.

Tags :
|