Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sun, 09 Aug 2020 3:37:37 PM

இந்தியாவில் 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலே கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

india,corona virus,corona death,corona prevalence ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு எண்ணிக்கையான 42 ஆயிரத்து 518-ல் பெரும்பான்மையானவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதம் என்பது 68.32 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் நாட்டின் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் 1 கோடியே 93 லட்சத்து 98 ஆயிரத்து 799 பேர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர்.

Tags :
|