Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரமலான் தொழுகைக்காக மசூதிகள் திறப்பு இல்லை; சவுதி அரேபியா அறிவிப்பு

ரமலான் தொழுகைக்காக மசூதிகள் திறப்பு இல்லை; சவுதி அரேபியா அறிவிப்பு

By: Nagaraj Mon, 25 May 2020 12:52:11 PM

ரமலான் தொழுகைக்காக மசூதிகள் திறப்பு இல்லை; சவுதி அரேபியா அறிவிப்பு

மசூதிகள் திறக்கப்படாது... ரமலான் பண்டிகையின்போது பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்லாமியர்களின் பள்ளிவாசலில் தொழுகை நடத்த பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

prayer,imams,mosque,not open,declaration ,தொழுகை, இமாம்கள், மசூதி, திறக்கப்படாது, அறிவிப்பு

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள மசூதிகள் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் எனவும், மக்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மெக்கா, மதினா புனித மசூதிகளில் இமாம்கள் மட்டும் தொழுகை நடத்துவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.

Tags :
|
|
|