Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பலியானவர்களின் ஆண்களே அதிகம்; சுகாதாரத்துறை தகவல்

கொரோனாவால் பலியானவர்களின் ஆண்களே அதிகம்; சுகாதாரத்துறை தகவல்

By: Nagaraj Wed, 14 Oct 2020 7:44:50 PM

கொரோனாவால் பலியானவர்களின் ஆண்களே அதிகம்; சுகாதாரத்துறை தகவல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள், மீதமுள்ளவர்கள் பெண்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. இந்நிலையில், 60 வயதுக்கு உட்பட்டவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏனென்றால் மொத்த இறப்பு விகிதத்தில், கோமார்பிடிட்டி எனப்படும் இணை நோயால் பாதிக்கப்பட்ட 45-60 வயதுடைய 14 சதவிகித பேரும், கோமார்பிடிட்டி அல்லாமல் 1.5 சதவிகித பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள், மீதமுள்ளவர்கள் பெண்கள் என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், “17 வயதிற்குப்பட்டவர்கள் மற்றும் 18-25 வயதினரிடமிருந்து 1சதவிகித இறப்புகள் பதிவாகியுள்ளன” என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர், “தொடர்ந்து 10 நாளாக இறப்பு என்பது 1,000க்குள்தான் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், 706 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 79 சதவிகிதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 23 சதவிகிதம், அதாவது 165 பேர் மகாராஷ்டிராவில் மட்டும் இறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதி அயோக் உறுப்பினர், வினோத் கே. பால், தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

men,corona,vulnerability,death tamil nadu,india ,ஆண்கள், கொரோனா, பாதிப்பு, இறப்பு தமிழகம், இந்தியா

“தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் வரை அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் வைரஸ் அதிகளவு பரவக்கூடும். பல நாடுகளில் தற்போது இரண்டாவது முறையாக கொரோனா உச்சத்தைத் தொட்டு வருகிறது. எனவே, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கூட்டத்தைத் தவிர்ப்பதன் மூலம் இதனைத் தடுக்க முடியும். இல்லை என்றால் பண்டிகை காலங்களில் அதிகளவு கூட்டம் கூடும் போது கொரோனா சூப்பர் பரவலாக மாறிவிடும். எனவே தடுப்பூசி வரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் ஒரே வழி” என்று குறிப்பிட்டார் வினோத் கே. பால்.

“உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள், இரண்டாம் கட்ட இறுதி பரிசோதனையில் உள்ளன. விரைவில் இதற்கான முடிவுகள் வரும். சீரம் நிறுவனத்தில், ஆக்ஸ்போர்டு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. நவம்பர் மாதத்தில் இதற்கான முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 11.69சதவிகிதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்; 1.53 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை 6,65,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,371 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|