Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலைக்கோட்டை விநாயகருக்கு இந்தாண்டு மெகா கொழுக்கட்டை படையல் இல்லை

மலைக்கோட்டை விநாயகருக்கு இந்தாண்டு மெகா கொழுக்கட்டை படையல் இல்லை

By: Nagaraj Sun, 23 Aug 2020 10:36:15 AM

மலைக்கோட்டை விநாயகருக்கு இந்தாண்டு மெகா கொழுக்கட்டை படையல் இல்லை

மெகா கொழுக்கட்டை இல்லை... திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலில், மெகா கொழுக்கட்டை இல்லாமல், நெய்வேத்திய படையல் செய்து, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது.

திருச்சி, மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை ஏறிச் செல்லும் வழியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் அருள் பாலிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியின் போது, திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தலா, 75 கிலோ வீதம், 150 கிலோவில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை உச்சிப்பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நேற்று மலைக்கோட்டை விநாயகர் கோவிலில், மெகா கொழுக்கட்டை படையல் செய்து, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்படவில்லை.

ஆனால், மலர்கள், மாவிலை தோரணம் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவிலில், அர்ச்சகர்களை கொண்டு, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேக ஆராதனை மற்றும் நெய்வேத்திய படையலுடன் சதுர்த்தி பூஜை செய்யப்பட்டது. தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

chaturthi puja,mega pudding,fruits,priests ,சதுர்த்தி பூஜை, மெகா கொழுக்கட்டை, பழங்கள், அர்ச்சகர்கள்

ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்திக்கு முதல்நாளன்று மடப்பள்ளியில் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஜாதிக்காய், எள், தேங்காய், நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களை ஒன்றாக கலந்து அதனை இருபங்காக பிரித்து 24 மணி நேரம் வேகவைப்பா். சதுா்த்தியன்று காலை மாணிக்கவிநாயகா், உச்சிபிள்ளையாருக்கு தலா 75 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும்.

உச்சிப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையை மூட்டையில் கட்டி தொட்டிலில் தூக்கிச் சென்று படைக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக அதிகாலை முதலே பக்தா்கள் காத்திருப்பா். மேலும், பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலுக்கு அனுமதியில்லாததால் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

Tags :
|