Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைப்பு

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைப்பு

By: Karunakaran Mon, 03 Aug 2020 3:03:11 PM

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைப்பு

கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அண்மையில் இந்த விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தபோது, டீயின் விலை ரூ.100 என கடைக்காரர் கூறியுள்ளார். இதனை கேட்ட ஷாஜி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் இதுகுறித்து அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் இதுகுறித்து ஷாஜி தனது புகாரை பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலம் அனுப்பினார்.

multiple discounts,coffee,cochin international airport,modi ,தள்ளுபடி, காபி, கொச்சின் சர்வதேச விமான நிலையம், மோடி

தற்போது இந்த புகாரின் அடிப்படையில் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமர் முன்வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்த டீ ரூ.15-க்கு விற்கப்படுகிறது.காபி ரூ. 20-க்கும், பருப்பு வடை, மெதுவடை போன்றவை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|