Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கும் மும்பை

முகக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கும் மும்பை

By: Nagaraj Sat, 31 Oct 2020 12:38:22 PM

முகக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கும் மும்பை

நூதன தண்டனை... மும்பையில் முககவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிபது மேலும் அபராதம் செலுத்த மறுப்பவர்கள் சாலையை சுத்தம் செய்தல் போன்ற சமூக பணிகளில் ஈடுபட வைக்க மும்பை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு பல நூதன தண்டனைகள் கொடுக்கப்பட்ட வருகின்றன. அது என்ன தண்டனை தெரியுமா? முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு, அபராதம் அல்லது தெருவை சுத்தம் செய்ய வேண்டும் என்று மும்பை மாநகராட்சி பி.எம்.சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

social work,modern sentence,mask,street cleanliness,practice ,சமூகப்பணி, நூதன தண்டனை, முகக்கவசம், தெரு தூய்மை, நடைமுறை

அதாவது ஒரு தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட, தற்போது 90 தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் பொது மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

ஆனால் இந்த நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க மறுத்து வருவதால், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை மாநில அரசுகள் அமல்படுத்தி உள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "இந்த நடவடிக்கை ஏற்கனவே அந்தேரி மேற்கு போன்ற நகரங்களில் பல்வேறு பகுதிகளில் இந்த தண்டனை வழங்கப்பட்ட நடைமுறையில் உள்ளது. இதுவரை 35 பேர் இந்த சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சாலையில் எச்சில் துப்பும் நபர்களுக்கும் இதுபோன்று தண்டனை வழங்கும் அதிகாரம் மும்பை மாநகராட்சி உள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|