Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேஸ்புக் ஆன்லைனில் கச்சேரி நடத்தி நிதி திரட்டும் இசைக்கலைஞர்கள்

பேஸ்புக் ஆன்லைனில் கச்சேரி நடத்தி நிதி திரட்டும் இசைக்கலைஞர்கள்

By: Nagaraj Sun, 16 Aug 2020 10:43:45 AM

பேஸ்புக் ஆன்லைனில் கச்சேரி நடத்தி நிதி திரட்டும் இசைக்கலைஞர்கள்

கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் பேஸ்புக் நேரலையில் கச்சேரி நடத்தி நிதி திரட்டுகின்றனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாதாரணமாகவே கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் இன்னிசைக் கச்சேரிகளில் பாடும் இசை கலைஞர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

ஆனால் எப்படி மற்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் வேலைகள் கொரோனாவால் முடக்கப்பட்டதோ, அதைக் காட்டிலும் அதிகமாக இசை கலைஞர்களுக்கு சுத்தமாக வருவாய் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.

concert,coordinator,facebook,fundraiser ,இசை நிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர், பேஸ்புக், நிதி திரட்டல்

இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் இசை கலைஞர்களுக்கு இசையால் இணைவோம் என்கிற தாரக மந்திரத்தோடு திருச்சி குருப்பிரியா என்கிற இசைக்குழுவினர் சேர்ந்து முகநூலில் நேரலையில் வாரத்திற்கு ஒரு நாள் இசை கச்சேரி நடத்தி, நிதி திரட்டுகின்றனர்.

மேலும் அரிசி உள்ளிட்ட பொருட்களையும் திரட்டி வாய்ப்பும், வருவாயும் சுத்தமாக இல்லாமல் தவித்து வரும் இசை கலைஞர்களுக்கு உதவி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் இந்த பணியின் மூலம் நலிவுற்ற கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குருப்பிரியா சுந்தரேசன்.

Tags :