Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்ததால் வெளியில் தெரியும் நந்தி சிலை

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்ததால் வெளியில் தெரியும் நந்தி சிலை

By: Nagaraj Wed, 22 July 2020 11:48:54 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்ததால் வெளியில் தெரியும் நந்தி சிலை

நீருக்கு வெளியே தெரியும் ஜலகண்டேசுவரர் கோயிலின் நந்தி சிலை... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு கீழே சரிந்ததால், நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலின் நந்தி சிலை நீருக்கு வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர் தேங்கும் பகுதிகளாக 60 சதுர மைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. அப்போது அப்பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

கிராமங்களைக் காலி செய்து சென்ற மக்கள் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தினால் தெய்வக் குற்றம் ஏற்படும் எனக் கருதி, கோயில்களில் இருந்து கடவுள் சிலைகள், சிற்பங்களை மட்டும் எடுத்துச் சென்று தாங்கள் குடியேறிய பகுதிகளில் புதிய கோயில்களைக் கட்டிக் கொண்டனர்.

இதனால் பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பிரம்மாண்டமான நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயிலும், 100 அடி உயரக் கோபுரங்கள் கொண்ட கிறிஸ்தவ தேவாலயமும் நீர்த்தேக்கப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடிக்கு மேலே உயர்ந்தால் இந்தக் கோயில்கள் நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் 78 அடிக்கு கீழே சரிந்தால் கோயில்கள் நீருக்கு மேலே தெரியத் தொடங்கும்.

கடந்த 14-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழே சரிந்ததால் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் நீருக்கு வெளியே தெரிந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணையின் நீர்மட்டம் 68.67 அடியாகச் சரிந்ததால் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோயிலில் இருந்த மிகப் பெரிய நந்தி சிலையின் தலை நீருக்கு வெளியே தெரியத் தொடங்கி உள்ளது.

nandi statue,mettur dam,outside,fishermen,desert ,நந்தி சிலை, மேட்டூர் அணை, வெளியே, மீனவர்கள், வெறிச்சோடி

நந்தி சிலை சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டதாகும். பல் ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும் இந்த சிலை சேதம் அடையாமல் உள்ளது.

இதைக் காண செல்லும் பார்வையாளர்களும், இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் கற்களைப் பெயர்த்துச் செல்வதால் மட்டுமே சில இடங்களில் நந்தி சிலை பெயர்ந்து காணப்படுகிறது. நந்தியின் இடது காதுப்பகுதி உடைபட்டுள்ளது. நந்தி சிலையைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து முடங்கி இருப்பதால் இப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags :