Advertisement

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா அறிவிப்பு

By: Karunakaran Tue, 27 Oct 2020 2:02:42 PM

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா அறிவிப்பு

இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. இருப்பினும் சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை.

தற்போது நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீர் மூலக்கூறுகள் நிலவில் பனிசூழ்ந்த பகுதிகள், நிழல்பகுதிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

nasa,water,moon,surface ,நாசா, நீர், சந்திரன், மேற்பரப்பு

சூரிய ஒளி விழாத நிலவின் தென்துருவ பகுதியில் பனிக்கட்டி வடிவில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு நீர் ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் கணித்ததை விட நிலவின் மேற்பரப்பில் அதிக அளவு தண்ணீர் இருக்கிறது. இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலவில் நாம் முன்பு நினைத்ததை விட அதிகமான தண்ணீர் இருக்க கூடும். சந்திர துருவ பகுதிகள் நிரந்தரமாக நிழலாடிய குளிர் பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானி ஹொன்னிபால் கூறுகையில், புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதியில் கூட மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயண ஆதாரம் கிடைத்துள்ளது.தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம். அது எப்படி சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதை கண்டால் அதை மனித ஆய்வுக்கான வளமாக பயன்படுத்தலாம் என்று கூறினார்.

Tags :
|
|
|