Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

By: Monisha Sat, 05 Sept 2020 11:25:40 AM

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

நாடு முழுவதும் தேசிய ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்களின் கூற்றின்படி குருவுக்கு அடுத்த இடத்தில் தான் தெய்வத்தை வைத்துள்ளனர். அதாவது மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் கூறி உள்ளனர். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் போதிப்பது ஆசிரியர் பணி இல்லை. அதையும் தாண்டி ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவைகளை போதிக்க வேண்டும். இந்த பணியை செய்ய தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராக செயல்பட வேண்டும்.

மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களை போற்றுவதற்காக ஆசிரியர் தினத்தை கொண்டாடி வருகிறோம். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நமது நாட்டில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார்.

national teachers day,dr radhakrishnan,birthday,teacher,service ,தேசிய ஆசிரியர்கள் தினம்,டாக்டர் ராதாகிருஷ்ணன்,பிறந்த நாள்,ஆசிரியர்,சேவை

இவர் தத்துவத்தை முதற்பாடமாக கொண்டு பி.ஏ. பட்டமும், எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். 1918-ம் ஆண்டு மைசூரு பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். 1923-ம் ஆண்டு இந்தியத் தத்துவம் என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். 1931-ம் ஆண்டு ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1939-ம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1946-ம் ஆண்டு யுனெஸ்கோ தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின், 1948-ம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணைய தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். இதைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை நாட்டின் 2-வது ஜனாதிபதியாக பதவி வகித்தார். டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரவப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கடந்த 1962-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்.

national teachers day,dr radhakrishnan,birthday,teacher,service ,தேசிய ஆசிரியர்கள் தினம்,டாக்டர் ராதாகிருஷ்ணன்,பிறந்த நாள்,ஆசிரியர்,சேவை

ஆசிரியர் தினத்தையொட்டி சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாகவும், அவர்களை பாராட்டும் விதமாகவும் மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகின்றன. இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை நடத்தி வருகிறார்கள். எனவே ஆசிரியர்களின் சேவையை போற்றுவோம்.

Tags :