Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம்

By: Karunakaran Tue, 08 Dec 2020 12:15:41 PM

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் வேளாண் துறை தனியாரிடம் செல்வதுமட்டுமல்லாமல் விவசாயிகள் தனியார் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிலை உருவாகும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பபெறக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப்பெறக்கோரி விவசாயிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

nationwide blockade,struggle,agricultural laws,farmers protest ,நாடு தழுவிய முற்றுகை, போராட்டம், விவசாய சட்டங்கள், விவசாயிகள் எதிர்ப்பு

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது முதலே எதிர்க்கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்களும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் பந்த் - ஐ ஆதரிக்கும் வகையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். ஆந்திரா மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெயில்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன்.

Tags :