Advertisement

மாணவர்களுக்கான நீட் இலவச பயிற்சி ஆன்லைனில் தொடக்கம்

By: Nagaraj Mon, 09 Nov 2020 4:03:53 PM

மாணவர்களுக்கான நீட் இலவச பயிற்சி ஆன்லைனில் தொடக்கம்

இலவச பயிற்சி தொடக்கம்... தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு மாணவர்களுக்கான நீட் இலவச பயிற்சி ஆன்லைனில் தொடங்கியது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனின் இன்ற துவங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

schooling,need exam,online,free training ,பள்ளிக்கல்வித்துறை, நீட் தேர்வு, ஆன்லைன், இலவச பயிற்சி

இதன் காரணமாக நீட் பயிற்சியில் பங்கேற்க 15,492 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இன்று முதல் தொடங்குகிறது. எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.

இந்த பயிற்சி நீட் தேர்வு எப்பொழுது நடைபெறுகிறதோ, அதற்கு முந்தைய வாரம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் ஆன்லைனில் குறுந்தேர்வுகள் நடத்தப்படும். நீட் பயிற்சி பாடங்கள் பள்ளிக்கல்வித்துறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
|